நாட்டின் முப்படை ராணுவ பிரிவுகளில் ஒன்றாக விளங்கும் விமானப்படையில் காலியாக உள்ள கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான இந்திய ஆண்,பெண் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அப்கேட் (AFCAT 2/2016) என்ற தேர்வு மூலம் பிளையிங், டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி ஆகிய பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: 02.07.1993 மற்றும் 01.07.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். இந்த தகுதித் தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பணிக்கான உயரம், எடை, மார்பளவு, பார்வைத்திறன் மற்றும் உடல்- உள நலம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வுகள் நடைபெறும். விமானப்படை பொது சேர்க்கைத் தேர்வு (அப்கேட்) எனப்படும் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதி, உடற்திறன் சோதித்தல், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து நிலையிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் பயிற்சி அளிக்கப்படும். பின்னர் பணி நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:30.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.careerairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...