'உள்ளாட்சி தேர்தலை எத்தனை கட்டமாக நடத்தலாம்' என, தமிழக தேர்தல் கமிஷன் ஆலோசனை செய்து வருகிறது
.தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உட்பட, 12 மாநகராட்சிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12,524 ஊராட்சிகள் உள்ளன.ஊரகம் மற்றும் நகர்ப்புறம் என இரு பிரிவாக, இந்த உள்ளாட்சி பதவிகள் பிரிக்கப்பட்டு உள்ளன.கடந்த 2011ல், ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம்,அக்., மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 458 பதவிகளுக்கு நேரடியாகவும், 14,020 பதவிகளுக்கு, மறைமுக மாகவும்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.இதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. 2011ல்,உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டடங்களாக நடத்தப்பட்டது. இதனால், பெரியளவில் வன்முறை உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடக்கவில்லை. ஓட்டு எண்ணிக்கையும், அமைதியானமுறையில் நடந்தது.ஆனால், தற்போதைய சட்டசபையில், தி.மு.க., மிகப்பெரிய பலத்துடன் உள்ளது. அதேபோல, உள்ளாட்சிபதவிகளை கைப்பற்றுவதற்கு, தி.மு.க.,வினரும் தீவிரமாக உள்ளனர். இதேமனநிலையில், அ.தி.மு.க.,வினரும் உள்ளனர்.ஆனால், தேர்தலை பிரச்னை இல்லாமல், சுமுகமாக நடத்த வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் விரும்புகிறது.
இதையடுத்து,தேர்தலை கடந்த முறை போல, இரண்டு கட்டமாக நடத்தலாமா அல்லது மூன்று கட்டங்களாக நடத்தலாமா என்ற ஆலோசனையில், மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.தேர்தல் நடத்தும் அதிகாரிகளான, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பே, தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது என, முடிவாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...