Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழ வியாபாரியின் மகள் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம்

         பொள்ளாச்சியைச் சேர்ந்த பழ வியாபாரியின் மகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
பி.பி.ஏ.-எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்பை அவர் தேர்வு செய்துள்ளார்.
இளநிலை சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ.-எல்.எல்.பி., பி.ஏ.-எல்.எல்.பி. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு நாள் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
இதற்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த பொள்ளாச்சியைச் சேர்ந்த எஸ்.தீபா, பி.பி.ஏ.-எல்.எல்.பி. படிப்பைத் தேர்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியது:
எனது தந்தை பழ வியாபாரம் செய்து வருகிறார். குடும்பத்தில் சட்டம் படித்தவர்கள் யாரும் கிடையாது. எனவே, சிறு வயதிலேயே சட்டம் படிக்க முடிவு செய்ததால், பிளஸ்-1 வகுப்பில் கலை மற்றும் வணிகப் பிரிவைத் தேர்வு செய்தேன். பள்ளியில் மாதிரி நாடாளுமன்றம், சட்டப் பேரவை போட்டிகளில் சபாநாயகராக அங்கம் வகித்தது சட்டப் படிப்பு மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியது.
இப்போது ஆற்றல்சார் பள்ளியில் இடம் கிடைத்திருப்பது பெற்றோருக்கும் மகிழ்ச்சி என்றார்.
பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பி.அருண் பிரபுவும் பி.பி.ஏ.-எல்.எல்.பி. தேர்வு செய்துள்ளார். இவர் பிளஸ்-2 வகுப்பில் வணிகவியல் பிரிவில் படித்து 1175 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை சென்னையில் வழக்குரைஞராக உள்ளார்.
மூன்றாம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த அம்ருதா சங்கரும் பி.பி.ஏ.-எல்.எல்.பி. தேர்வு செய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை பி.காம்.-எல்.எல்.பி., பி.சி.ஏ.-எல்.எல்.பி. படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive