அண்ணா
பல்கலையின் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்.,
படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங்
நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல், 15 முதல், 'ஆன் - லைனில்' விண்ணப்ப
பதிவு துவங்கியது; மே, 31ல் முடிந்தது; 2.52 லட்சம் பேர் பதிவு செய்தனர்;
அவர்களில், 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.
நேற்று
வரை, 1.25 லட்சம் பேரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அண்ணா
பல்கலைக்கு வந்துள்ளன. விண்ணப்பங்களை அனுப்ப, இன்று கடைசி நாள்; இன்று
மாலை, 6:00 மணிக்குள் வழங்கலாம். கடந்த ஆண்டுகளில், கடைசி நாளில் தபாலில்
அனுப்பப்பட்ட விண்ணப்பங்களும், ஒரு சில நாட்கள் தாமதமாக வந்தாலும் ஏற்றுக்
கொள்ளப்பட்டன.
அதேபோல், இந்த ஆண்டும், ஜூன், 4ம் தேதி தபாலில் பதிவு செய்த விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேபோல், இந்த ஆண்டும், ஜூன், 4ம் தேதி தபாலில் பதிவு செய்த விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...