புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்ற பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், தொலைபேசியில் ஒரு முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், அதனை மறுமுனையில் கேட்பவரால் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை கண்டுபிடித்த தமிழரான உமேஷ் சச்தேவ் இடம்பெற்றுள்ளார்.
30 வயதான இந்திய மென்பொருள் நிபுணரான உமேஷ் சச்தேவ், உலகை மாற்றியவர்கள் என்ற டைம் இதழ் இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில், அவசரகால உதவி மையங்களுக்கு தொடர்பு கொள்ளும் மக்கள், தங்களது உள்ளூர் மொழியில் பேசுவதை, தொலைபேசியின் மறுமுனையில் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை அறிமுகம் செய்த சாதனைக்காக இடம்பெற்றுள்ளார்.
இதே போல, விவசாயிகள், தட்பவெப்ப நிலை குறித்து அறிந்து கொள்ளவும் மென்பொருளை உருவாக்கியுள்ளார் சச்தேவ்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...