சென்னை ஜெய்கோபால் கரோடியா தொண்டு
நிறுவனத்தின் புத்தக வங்கி சார்பில் இலவச பாடப் புத்தகங்கள் பெற கல்லூரி
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த புத்தக வங்கி மூலம் தமிழகம்
முழுவதிலும் இருந்து 250 கல்லூரிகளைச் சேர்ந்த 85 ஆயிரம் மாணவர்கள்
பயனடைந்துள்ளனர். இப்போது பொறியியல், வணிகம், கலை, அறிவியல், கணினி
அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களில் 600 தலைப்புகளில் 35 ஆயிரம்
புத்தகங்கள் வரை இருப்பில் உள்ளன.
இந்தப் புத்தகங்களைப் பெற விரும்பும்
மாணவர்கள் ""கதவு எண்: 6, ஏழாவது தெரு, யு பிளாக், அண்ணா நகர், சென்னை''
என்ற முகவரியில் விண்ணப்பங்களைப் பெற்று, இருப்பிடச் சான்று, கல்லூரி
அடையாள அட்டையுடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. தங்களின் தேர்வு முடிந்த பின் புத்தகங்களை மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு
www.jgvvbookbank.org என்ற இணையதள முகவரியிலும், 044 26206261 என்ற
தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று புத்தக வங்கி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...