பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க
கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரிய
வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்திய வங்கிகள் சங்கத்தின் பரிந்துரைப்படி,
ஏ.டி.எம்.,களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதை வரைமுறைப்படுத்தி,
ரிசர்வ் வங்கி, சுற்றறிக்கை வெளியிட்டது. அதன்படி, கட்டணமின்றி பிற வங்கி
ஏ.டி.எம்., களில் பணம் எடுக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
ஏ.டி.எம்.,களை அமைத்ததன் நோக்கம்,
மக்களுக்கு உதவி செய்யவே. வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்த வேண்டுமே
தவிர, ஏற்கனவே வழங்கி வரும் சலுகையை குறைக்கக்கூடாது. பிற வங்கி ஏ.டி.எம்.,
களில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்துள்ள ரிசர்வ் வங்கியின்
சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழரசன் மனு செய்திருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி
நுாட்டி.ராமமோகன ராவ் கொண்ட அமர்வு, 'ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவில்,
நீதிமன்றம் தலையிட முடியாது' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...