தேர்வு
எழுத போதிய இடவசதி இல்லாததால் நேற்று நடந்த மதுரை காமராஜ் பல்கலை
தொலைநிலைக் கல்வி முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டன.
இப்பல்கலையில்
எம்.ஏ., எம்.காம்., உட்பட முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு 2016ம்
ஆண்டிற்கான அல்பருவமுறை தேர்வுகள் நேற்று துவங்கின. தமிழகத்தில் 25
மையங்களிலும், வெளிமாநிலங்களில் 190 மையங்களிலும் மாணவர்கள் தேர்வு
எழுதினர்.
மதுரை
ஞானஒளிவுபுரத்தில் லயோலா தொழில்நுட்ப கல்லுாரி மையத்தில் 750 பேருக்கு
தேர்வு எழுத ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால் 500 பேருக்கு
மட்டுமே இருக்கை மற்றும் ஹால்கள் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதனால் 250
பேர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக கூடுதல் தேர்வாணையர் மனோகரன் மையத்திற்கு சென்றார். அவரிடம் தேர்வர்கள் சரமாரியாக புகார் அளித்தனர்.
இதனால், காலை 10.00 மணிக்கு தேர்வு எழுதிய 500 பேருக்கும் 11.30 மணிக்கு தேர்வு எழுத வேண்டாம் என தெரிவிக்கப்பட்டதால் பாதியிலேயே அவர்கள் ஹாலை விட்டு வெளியேறினர். இதையடுத்து எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வுகள் தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைக்கப்பட்டது.தேர்வகள் கூறுகையில், 'ஆயிரக்கணக்கானோர் எழுதும் தேர்வுகளை திட்டமிட்டு நடத்த பல்கலை தவறியது அதிருப்தியளிக்கிறது,' என்றனர்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., தேர்வு மையம் மாற்றம்: 'ஜூன் 6ல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., தேர்வுகள் லயோலா தொழில் நுட்பக் கல்வி மையத்தில் நடத்துவதற்கு பதில் மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலை கல்லுாரி மையத்தில் தேர்வுகள் நடத்தப்படும்,' என கூடுதல் தேர்வாணையர் மனோகரன்
தெரிவித்துள்ளார். மாறியதா வினாத்தாள்: டான்பாஸ்கோ மையத்தில் எம்.ஏ., தமிழ் பாட தேர்வு நடந்தது. அதில் 'பிற்கால இலக்கியம்' என்ற தேர்வு வினாத்தாள், நடப்பாண்டு பாடத்திட்டத்திற்கு பதில், 2002ம் ஆண்டு பாடத்திட்டத்திற்கான வினாத்தாளாக இருந்ததால் தேர்வர்கள் எழுதாமல் மையத்தை விட்டு
வெளியேறினர். தேர்வர்கள் கூறுகையில், 'வினாத்தாளில் 2016ம் ஆண்டு என குறிப்பிட்டாலும் அதில் இடம் பெற்ற வினாக்கள் 2002ம் ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன,' என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...