ஆண்டுதோறும் கல்வி கட்டணத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு எதிராக
வெகுண்டெழுந்த பெற்றோர், தாங்களே இணைந்து பள்ளி நடத்த முடிவு செய்து ஆயத்த
பணிகளில் இறங்கியுள்ளனர்.
பெங்களூர் ஒயிட்பீல்ட் பகுதி பெற்றோருக்கு உள்ள
இந்த துணிவு, பிற மக்களுக்கும் வந்தால் கல்வி கட்டண கொள்ளைக்கு முடிவு
வரும் என்று நம்பலாம். பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ளது ஒயிட்பீல்ட்.
இங்குள்ள ஒரு தனியார் பள்ளி
வருடந்தோறும் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்துவது
வழக்கமாம். இந்த ஆண்டும் அதேபோல கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால்
கோபமடைந்த சுமார் 300 பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து, நாமே இணைந்து பள்ளி
நடத்தலாமே என ஆலோசித்துள்ளனர். இதில் பலரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாகும்.
இவர்கள் 'கர்நாடகா பள்ளிகள் பெற்றோர்' என்ற பெயரில் சங்கத்தை
ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை 2 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இன்னும்
சில நாட்களில் 3வது கூட்டம் நடத்தி, யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பை
ஒதுக்குவது என்பதை தீர்மானிக்க உள்ளனர். பள்ளி தொடங்க 2 ஏக்கர் நிலவரத்தை
இலவசமாக அளிக்க 3 தொழிலதிபர்கள் தயாராக உள்ளதாகவும், லாபமோ, நஷ்டமோ இல்லாத
அளவுக்கு இப்பள்ளிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சங்கத்தின் துணை தலைவர்
செல்வராஜ் மாரியப்பன் தெரிவிக்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...