ஒரே மாதிரியான பெயர்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் விவரத்தை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
2016-17ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 525 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டிலான பி.இ. இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கல்லூரியின் தரம் குறித்து ஓரளவுக்கு எடைபோடுகின்ற வகையில், அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தையும், ஓரே மாதிரி பெயர் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் ஆண்டுதோறும் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.நிகழாண்டிலும் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், ஓரே மாதிரி பெயர் கொண்ட 200-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறுகையில், மாணவர்கள் நலன் கருதியே விவரங்கள் வெளியிடப்படுகின்றன. கல்லூரியின் பெயரை வைத்து அல்லாமல், குறியீட்டு எண் அடிப்படையில் மாணவர்கள் இடத்தைத் தேர்வு செய்தால் எந்தவித குழப்பமும் வராது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...