''நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி கேட்டு, ஜூலை 13ல் முதல்வர் ஜெயலலிதா
இல்லத்திற்கு சென்றுகருணை மனு வழங்க திட்டமிட்டு உள்ளோம்,'' என, மக்கள்
நலப்பணியாளர் சங்க மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார். அவர்
கூறியதாவது:
நீக்கப்பட்ட 25,000 மக்கள் நலப்பணியாளர்களில் இறப்பு, வேறு பணிகளுக்கு சென்றவர்கள் என தற்போது 13,500 பேர் உள்ளனர். கடந்த 1991 ஜூலை 13ல் பணி நீக்கம் செய்யப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. மீண்டும் பணி வழங்காமல் அலைக்கழிக்கப்படுகிறோம். 'உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்று, மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்' என வலியுறுத்தி ஜூலை 13ல் முதல்வர் ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று கருணை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம், என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...