தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும்
திறக்கப்படுகின்றன.
இதையொட்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் உட்பட
அரசு நலத்திட்டங்கள் முதல் நாள் காலை 10.00 மணிக்குள் மாணவர்களுக்கு வழங்க
வேண்டும் என கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டது.நேற்று மாலை
அதிகாரிகள்,
தலைமையாசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம்:'புத்தகம், நோட்டு மற்றும் சீருடைகள்
பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10.00 மணிக்குள்
கட்டாயம் வழங்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவ்வாறு
வழங்க வேண்டாம். எப்போது வழங்க வேண்டும் என்ற விபரத்தை, கல்வி அதிகாரிகள்
பின்னர் அறிவிப்பர்,' என தெரிவிக்கப்பட்டது.காரணம் என்ன?: அரசு பள்ளி
தலைமையாசிரியர் ஒருவர் கூறியதாவது: இன்று (ஜூன் 1) மாணவர்களுக்கு முதல்வர்
ஜெயலலிதா நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்வி அதிகாரிகள் ஏற்பாடு
செய்துள்ளனர்.
முதல்வர் வழங்குவதற்கு முன் எந்த பள்ளிகளிலும் யாரும் நலத் திட்டங்களை
வழங்கி விடக்கூடாது என்பது கல்வி அதிகாரிகள் திட்டம். இதனால் ஜெ.,
நிகழ்ச்சி குறித்து முடிவு செய்யப்பட்ட பின்னர், பள்ளிகளில் மாணவர்களுக்கு
புத்தகங்கள் வழங்க வேண்டியது குறித்து கல்வி அதிகாரிகள் அறிவிப்பதாக
தெரிவித்துள்ளனர், என்றார்.
Thanks to Dinamalar
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...