தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று கூடுகிறது.
இதில், பேரவைத் தலைவராக ப.தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருவரும் தங்களதுவேட்புமனுக்களை சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்கள் ஏற்கப்படுவதாக ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இருவரின் வேட்புமனுக்களையும் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்துள்ளார். பேரவைத் தலைவராக ப.தனபால் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தாற்காலிகத் தலைவராக உள்ள எஸ்.செம்மலை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் கூடும் பேரவைக் கூட்டத்தில் வெளியிடுவார். தொடர்ந்து அவர்களின் பதவியேற்பு நடக்க உள்ளது.பின்னர் அவர்களை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினும் பேச உள்ளனர். பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றதும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி. ஜெயராமன் தேர்வானதற்கான அறிவிப்பை தனபால் வெளியிடுவார். அதன்பின்னர், தனபால் ஏற்புரை நிகழ்த்துவார்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்படும் எனத் தெரிகிறது. 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் மே 25-ஆம் தேதி கூடியது. அந்தக் கூட்டத்தில் உறுப்பினர்கள்பதவியேற்பு நடைபெற்றது. அதன்பின்னர், அந்தக் கூட்டத்தின் நீட்சியாக இப்போது மீண்டும் பேரவை கூடுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...