தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியை நிறைவு
செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு
உள்ளது.இப்பணி, கடந்த மாதம் துவங்கியது.
தகுதியான வாக்காளர்கள் அனைவரையும்,
வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள
தவறுகளை களைய வேண்டும்.
ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அதை நீக்க வேண்டும். இடம் மாறி சென்ற வாக்காளர், இறந்த வாக்காளர் பெயர் நீக்கப்பட வேண்டும். வாக்காளர்களின் புகைப்படம் தரமானதாக சேர்க்கப்பட வேண்டும். 'இப்பணியை, ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
பணிகள் காலதாமதமாவதால், இப்பணியை நிறைவு செய்வதற்கான காலக்கெடு, ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதேபோல, சட்டசபை தேர்தலுக்கு முன், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி வந்த விண்ணப்பங்களில்,ஏராளமானவை நிராகரிக்கப்பட்டன. அவற்றையும் பரிசீலனை செய்து, தகுதியான நபர்களாக இருந்தால், வாக்காளர் பட்டியலில் சேர்க்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...