மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான
'செனட்' உறுப்பினர் தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பல்கலை துணைவேந்தராக இருந்த கல்யாணி பதவிக்
காலம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகியும் புதிய துணைவேந்தர் நியமனத்தில்
இழுபறி
ஏற்பட்டுள்ளது. இதற்காக பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் 'கன்வீனர்
கமிட்டி' அமைக்கப்பட்டு, அதன் இறுதி கட்ட பணியின்போது 'செனட்' பிரதிநிதி
ராமசாமி தன் பதவியை ராஜினமா செய்தார். சட்டசபை தேர்தல் தேதியும்
அறிவிக்கப்பட்டதால் நன்னடத்தை விதி அமலால் புதிய துணைவேந்தர் தேர்வு பணிகள்
நிறுத்தப்பட்டன.
தற்போது புதிய துணைவேந்தர் தேர்வு பணியில் மீண்டும் சுறுசுறுப்பு
ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 'செனட்' தேர்தல் நடத்தக் கோரி பல்கலை
சார்பில் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் 'செனட்' உறுப்பினர்
தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இதுகுறித்து உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சட்டசபை கூட்டத்
தொடர் முடிவுற்றதால் சென்னை மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகளுக்கு விரைவில்
புதிய துணைவேந்தர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை காமராஜ்
பல்கலை 'செனட்' உறுப்பினர் தேர்தல் தேதி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படலாம்.
தேர்தலை நடத்த பல்கலை தயாராக உள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...