Home »
» சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை! கூடுதல் ஊழியர் நியமிக்க கோரிக்கை.
பள்ளிகளில், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும்
என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது;
கூடுதல் ஊழியர்
நியமித்த பின்பே, திட்டத்தை துவங்க வேண்டும் என, சத்துணவு ஊழியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், 2012ல் மாற்றம் கொண்டு
வரப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை - காய்கறி பிரியாணி, செவ்வாய் -
கொண்டக்கடலை; புதன் - தக்காளி சாதம்; வியாழன் - புளியோதரை; வெள்ளிக்கிழமை -
சாதம், சாம்பாருடன் வழங்கப்படுகிறது. கூடுதலாக, கருவேப்பிலை சாதம், அவித்த
முட்டை, மிளகுத்தூள் முட்டை வழங்கப்படுகிறது. ஒன்றியத்துக்கு ஒரு
அங்கன்வாடி வீதம் இருந்த திட்டம், பின்னாளில் அனைத்து பகுதிகளுக்கும்
விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், அதற்கான ஆயத்த
பணிகள், துவக்க கட்டத்திலேயே நிற்கின்றன.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க., அளித்த
வாக்குறுதியில், அரசு பள்ளிகளில், காலை சிற்றுண்டி வழங்கப்படும் என,
தெரிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து, மீண்டும் முதல்வராக ஜெ.,
பொறுப்பேற்றதும், சிற்றுண்டி திட்டத்தில் கையெழுத்திட்டார். ஜூன், 1ல்
நடப்பு கல்வியாண்டு துவங்கியது. ஆனால், பள்ளிகளில் காலை சிற்றுண்டி
வழங்குவதற்கான அறிகுறி தெரியவில்லை. திட்டம் எப்போது துவங்கும் என,
பெற்றோர் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கல்வித்துறை அலுவலர்கள் தரப்பில் விசாரித்தால், "முதல்கட்டமாக, குறிப்பிட்ட
சில மாவட்டங்களில், காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும். பின்,
படிப்படியாக சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்களுக்கு சமையல் கலைஞர்கள்
மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்'
என்றனர்.
ஆனால், இத்திட்டத்தை துவங்க, கூடுதல் ஊழியர் நியமிக்க வேண்டும் என,
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் கூறுகையில், "காலை, 9:00 மணிக்கு பள்ளி செயல்பட துவங்கும். 8:00
மணிக்குள் சிற்றுண்டி தயாரித்து வழங்க வேண்டும். அதற்கு, ஒரு மணி நேரம்
முன்னதாக, 7:00 மணிக்கே, பள்ளிக்கு வர வேண்டும். இப்போதுள்ள பணியாளர்,
உதவியாளர்களை வைத்து, விதவிதமான உணவை தயாரிப்பது சிரமம். கூடுதல் ஊழியர்
நியமித்தால் மட்டுமே, திட்டத்தின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து விவாதிக்க
முடியும்' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...