தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில்மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு
நடத்தினர். பேராசியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களில் காலியாக
இருந்தது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைகண்டறிந்தனர். அவர்கள் அனுமதியளித்த
பின்னரே இந்தாண்டுமாணவர் சேர்க்கை நடைபெறும்.
தேனி அரசு மருத்துவ கல்லுாரியில் 2006ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆண்டிற்கு 100 மாணவர் சேர்க்கப்படுவர்.அதற்கு முன் டில்லியில் இருந்து மருத்துவ கவுன்சில் குழுவினர் இங்கு ஆய்வு செய்து அனுமதி வழங்குவர்.வழக்கமாக அவர்களின் வருகை தேதி குறித்து கல்லுாரிக்கு முன்கூட்டியே தெரிந்து விடும். கல்லுாரி நிர்வாகம் காலிப்பணியிடங்களே இல்லை என்பதை காட்டுவதற்காக வெளி மாவட்ட மருத்துவ கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை தற்காலிகமாக வரவழைத்து ஆய்வு குழுவினருக்கு கணக்கு காட்டுவர். அதன் தொடர்ச்சியாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதியும் கிடைக்கும்.இந்த மருத்துவக் கல்லுாரியில் 115 பேராசிரியர், உதவி பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். தற்போது 90 பேர் மட்டுமே உள்ளனர். சில முக்கிய துறைகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மருத்துவ கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பஸ்சில் வந்த குழு
இந்நிலையில் கடந்த வாரம் டில்லியில் இருந்து மருத்துவ கவுன்சில் குழுவை சேர்ந்த 3 அதிகாரிகள் தேனி மருத்துவ கல்லுாரி ஆய்வுக்கு வந்தனர். முன்னதாக இவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து ஆண்டிபட்டிக்கு காரிலும், அங்கிருந்து பஸ்சில் தேனி மருத்துவ கல்லுாரிக்கு வந்தனர்.
வீடியோ பதிவு
முதல்வர் அறைக்கு சென்று மருத்துவ கவுன்சில் குழுவினர்என்று கூறிய பின்னரே, அவர்கள் வந்தது குறித்து தெரிந்துஅதிர்ச்சியடைந்தனர். தற்போது பணியில் உள்ள பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களின் பெயர்,பதவி விபரத்துடன் கையெழுத்து பெற்றனர். அதன்பின் துறை வாரியாக எத்தனை பேர் பணியில் உள்ளனர் என்பதை அறிய அணிவகுப்பு போல் நிறுத்தி 'வீடியோ'வில் பதிவு செய்தனர்.
காலிப்பணியிடங்கள்
அப்போது காலிப்பணியிடங்கள் வெட்டவெளிச்சமாயின. எலும்பு முறிவு, ரேடியாலஜி உட்பட சில துறைகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடம் காலியாகஇருப்பது தெரியவந்தது.மருத்துவமனை இ.சி.ஜி. பிரிவில் ஆண், பெண் இருபாலரையும் ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளிப்பது ஏன், புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகளில் டாக்டர் பற்றாக்குறையால் பாதிப்பு, மருத்துவ மாணவர்கள்பாதிப்பு விபரங்களை ஆய்வு செய்தனர்.மறுநாள் மாற்று பணியாக சில டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். இதை கவுன்சில் ஏற்க வில்லை. சில குறைகளை நிவர்த்தி செய்யுமாறு சுட்டிக்காட்டி திரும்ப வருவதாக கூறி சென்றுள்ளனர். அவர்கள் அனுமதியளித்தபின்னரே இந்தக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...