பள்ளி மாணவர்கள், தேவையான பாடப் புத்தகங்களை, பாடநுால் கழக
இணையதளத்தில்பதிவு செய்து, பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி
பாடத் திட்டத்திற்கான பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி
பணிகள் கழகம் சார்பில் வினியோகம் செய்யப்படுகின்றன.
தனியாக புத்தகம் வாங்க விரும்பும் மாணவர்கள், பாடநுால் கழகத்தின் இணையதளமான, https:/textbookcorp.in/ மூலம் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைபயன்படுத்தும் மாணவர்கள், முதற்கட்டமாக தங்கள் பெயர், பள்ளி, மொபைல் போன் எண், வீட்டுமுகவரி உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின், தேவையான புத்தகங்களை பதிவு செய்து பெறலாம்.தாலுகா அலுவலகங்களில் இயங்கும், அரசு இ - சேவை மையங்கள் மூலமும், புத்தகங்களை பதிவு செய்தால், கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...