தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்,தொழிலாளர் மேலாண்மை
பட்டப்படிப்பில் சேர,விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,ஜூன், 15வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,தமிழ்நாடு தொழிலாளர் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனம். இங்கு,பி.ஏ.,மற்றும் எம்.ஏ.,தொழிலாளர் மேலாண்மை படிப்புகள்,சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு,பயிற்றுவிக்கப்படுகிறது.அத்துடன்,பி.ஜி.டி.எல்.ஏ.,எனப்படும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப்படிப்பு - மாலை நேர பட்டயப்படிப்பு;டி.எல்.எல்.,மற்றும் ஏ.எல்.,எனப்படும் தொழிலாளர்சட்டங்களும்,நிர்வாகவியல் சட்டமும் - வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு மட்டும் படிப்புகள்,தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றன.இவற்றில் சேர விரும்புவோர்,மே, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்என,அறிவிக்கப்பட்டிருந்தது.
காலக்கெடுவை நீட்டிக்கும்படி மாணவர்களிடம் இருந்து கோரிக்கை வந்ததால்,விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு,ஜூன், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு, 98411 92332, 98841 59410, 044 - 2844 0102, 2844 5778,ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...