அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் உள்ள, 1.92 லட்சம் இடங்களுக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், துவங்கியது.
முதல் மாணவி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை
தேர்வு செய்தார். தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரிகள் அண்ணா பல்கலையின்
இணைப் புடன் செயல்படுகின்றன.
மொத்தம், 524
கல்லுாரிகள் இந்த முறை பி.இ., - பி.டெக்., அட்மிஷன் நடத்துகின்றன.
இவற்றில், 13 கல்லுாரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை.விளையாட்டு பிரிவு : இந்த
கல்லுாரிகளில், 65 சதவீதம் அரசு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக
இடங்களாகவும் நிரப்பப்படுகின்றன. சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்லுாரிகள்,
தலா, 50 சதவீதம் அரசு மற்றும் நிர்வாக இடங்களாக மாற்றி கொள்ள அனுமதிக்கப்
பட்டுள்ளது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு, நேற்று முதல் ஒற்றை சாளர
கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில்,விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு ,
கவுன்சிலிங் நடந்தது. இதில், சென்னை, வேலம்மாள் மெட்ரிக் பள்ளியின் செஸ்
விளையாட்டு மாணவி வர்ஷினிமுதல் இடம் பெற்றார். அவர் செஸ் விளையாட்டு
போட்டிக்கு சென்றிருந்ததால், அவரது தந்தை கவுன்சிலிங்கில் பங்கேற்று,
கிண்டி இன்ஜி., கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்படிப்பை தேர்வு
செய்தார்.
நாமக்கல்லை சேர்ந்த நவீன் பிரபு, 'கோகோ' விளையாட்டின் மதிப்பெண் மூலம், இரண்டாம் இடம் வந்தார். அவர் சென்னை, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு செய்தார். மதுரை, சிம்மக்கல், சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியின் கேரம் விளையாட்டு மாணவி ஸ்வேதா, மூன்றாம் இடம் பெற்று, குரோம்பேட்டை எம்.ஐ.டி.,யில், 'புரொடக் ஷன் இன்ஜி.,' படிப்பை தேர்வு செய்தார்.
வாழ்த்து : கவுன்சிலிங்கில் இட ஒதுக்கீடு பெற்ற, முதல், ஐந்து பேருக்கு, விளையாட்டு துறை செயலர் ராஜேந்திர குமார், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி, பல்கலை பதிவாளர் கணேசன், மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி ஆகியோர் ஒதுக்கீட்டு ஆணை வழங்கி வாழ்த்தினர்.
இன்று மாற்று திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. வரும், 27ம் தேதி காலை, 7:30 மணிக்கு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த ஆண்டு, மொத்தம், 1.31 லட்சம் விண்ணப்பங்கள், கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றுள்ளன. கவுன்சிலிங் தொடர்பான அழைப்பு கடிதங்கள், https://www.annauniv.edu இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இதே தளத்தில் மாணவர் சேர்க்கை, சான்றிதழ் கள், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றை முன்கூட்டியே படித்து, தயாராக வரும்படி மாணவர் சேர்க்கை செயலர் இந்துமதி தெரிவித்தார்.தங்கும் வசதி : கவுன்சிலிங்கிற்கு வரும் வெளியூர் மாணவியர், பெண் துணையுடன் வந்தால், அவர்களுக்கு அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள மாணவியர் விடுதியான ரோஜா கட்டடத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 600 பேர் தங்குவதற்கான அறைகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான ஏற்பாடு களை, கிண்டி இன்ஜி., கல்லுாரி முதல்வர் நாராயணசாமி மேற்கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...