தோலில் வெண்புள்ளி இருப்பதை
தொடக்கத்திலேயே கண்டறிந்தால் 6 மாத தொடர் சிகிச்சையில் கட்டுப்படுத்தலாம்
என சென்னை அரசு ஸ்டான்லி கல்லூரி மருத்துவமனையின் அழகு சிகிச்சையியல்
துறைத் தலைவர் ஜி.ஆர்.ரத்னவேல் தெரிவித்தார்.
சர்வதேச வெண்புள்ளி தினம் குறித்த விழிப்புணர்வு
நிகழ்ச்சி, இந்த மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில்,
ரத்னவேல் மேலும் பேசியதாவது:
நாட்டில் 12 கோடி பேருக்கு வெண்புள்ளி பாதிப்பு உள்ளது.
தமிழகத்தில் 1.50 கோடி முதல் 2 கோடி பேருக்கு உள்ளது. வெண்புள்ளியை
சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். சிகிச்சை மூலம் சரி செய்ய
முடியாவிட்டாலும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றார். இதில்,
வெண்புள்ளி, தோல் அரிப்பு, முடி கொட்டுதல், இளநரை, முகத்தில் மரு, தோல்
தழும்பு தடிப்புகள் போன்றவை குறித்து பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு
விளக்கம் அளிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...