Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுவழங்கும்பணியை, அக்., மாதம் முதல்துவக்க,உணவுத்துறை முடிவுசெய்துள்ளது. 
ரேஷன்கடையில் வழங்கப்படும் இலவசஅரிசி,குறைந்தவிலையில் விற்கப்படும்பருப்புஉள்ளிட்டபொருட்கள் வினியோகத்தில்,முறைகேடு நடக்கிறது. இதைத்
தடுக்க, ஸ்மார்ட்ரேஷன் கார்டுவழங்க,தமிழகஅரசு முடிவுசெய்தது. இதை, அக்.,முதல்செயல்படுத்த, உணவுத் துறைகாலக்கெடு நிர்ணயித்துஉள்ளது.
திட்டம் செயல்படுத்தும் முறை
● அனைத்து ரேஷன் கடைகளுக்கும், 'டேப்ளட்'இயந்திரம்வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, 'பாயின்ட் ஆப்சேல்' என, பெயரிடப்பட்டுஉள்ளது
● ரேஷன் கார்டுதாரர், குடும்பஉறுப்பினர்கள்அனைவரின், 'ஆதார்' அட்டைகளை,ரேஷன்ஊழியரிடம் வழங்கவேண்டும்; அதை,அவர் டேப்ளட்இயந்திரத்தில், 'ஸ்கேன்' செய்துவிட்டு, ரேஷன்கார்டுதாரரிடம் திரும்பவழங்குவார்
● ரேஷன் கார்டுதாரரிடம் மொபைல்எண்ணும்கேட்டுவாங்கப்படும்
● தற்போது, 13 மாவட்டங்களில் உள்ளரேஷன்கடைகளில், டேப்ளட் கருவிவழங்கப்பட்டுஉள்ளது; ஜூலை இறுதிக்குள்,அனைத்துமாவட்டங்களுக்கும் வழங்கப்படும்
● ரேஷன் கடைகளில், செப்., வரை,ஆதார்விவரமும், மொபைல்எண்ணும்வாங்கப்படும்
● ரேஷன் கடையில், ஸ்கேன்செய்யப்பட்டஆதார் விவரம், உணவுத்துறைஅலுவலகத்தின், 'மெயின் சர்வருக்கு'சென்று விடும்
● ஆதார் விவரத்தின் அடிப்படையில், 'கிரெடிட்,டெபிட்கார்டு' வடிவில்ஸ்மார்ட்ரேஷன்கார்டு அச்சிடப்படும். அந்த கார்டில்,தமிழக அரசின்முத்திரை இடம்பெறும்;குடும்பத் தலைவர்புகைப்படம் இடம் பெறவும்வாய்ப்புள்ளது
● ரேஷன் கடை வாயிலாக, மக்களுக்கு ஸ்மார்ட்ரேஷன் கார்டுவினியோகம் நடக்கும்
● கார்டுதாரர், ரேஷன் கடைக்குசென்றுபொருட்கள்வாங்கும் போது, ஸ்மார்ட்ரேஷன்கார்டை வழங்கினால், ஊழியர் அதை,பாயின்ட் ஆப்சேல் இயந்திரத்தில்ஸ்கேன்செய்தபின், 'பில்' போடுவார்.அந்தவிவரம்,உடனேகார்டுதாரரின் மொபைல் போனுக்கு,எஸ்.எம்.எஸ்., மூலம்செல்லும்; உணவுத்துறைசர்வரிலும்பதிவாகும்.இதன் மூலம், ரேஷன்கடைகளில்முறைகேடு குறையவாய்ப்புஉள்ளது.இதுகுறித்து, உணவுமற்றும்கூட்டுறவுதுறை அதிகாரிஒருவர்கூறியதாவது:தமிழக அரசுஅறிவித்தால், இந்தமாத இறுதிக்குள் அரியலுார்,புதுக்கோட்டையில், ஸ்மார்ட் ரேஷன்கார்டுவழங்கமுடியும். இருப்பினும், அக்.,மாதம்முதல்,ஸ்மார்ட்ரேஷன்கார்டு வழங்க, முடிவுசெய்யப்பட்டு உள்ளது. அரசின்முடிவைபொறுத்து, திட்டத்தில்மாறுதல்ஏற்படவாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.
வழிகாட்டும் புதுச்சேரி
புதுச்சேரி அரசு, 2011ல், புத்தக வடிவில்இருந்தரேஷன்கார்டுகளை, ஸ்மார்ட் கார்டுவடிவில்வழங்க முடிவுசெய்தது.ஆதார்கார்டுக்கு எடுக்கப்பட்ட புகைப்படம்,கண் கருவிழிபடம், கைரேகைகள், ஸ்மார்ட்கார்டுக்குபயன்படுத்தப்பட்டன. இந்ததகவல்களைசிறிய, 'சிப்' வடிவில் ஏற்படுத்தி,குடும்பத் தலைவர்புகைப்படத்துடன் கூடியஸ்மார்ட் ரேஷன் கார்டுதயாரித்து, மக்களுக்குவழங்கப்பட்டது. புதுச்சேரியில், 2.50 லட்சம்ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்வழங்கப்பட்டுஉள்ளன.
குடும்பத் தலைவர், தலைவிஅல்லதுரேஷன்கார்டு பெயர்வரிசையில்முதலில்உள்ள, இரண்டுநபர்களில்யாரேனும்ஒருவர் ரேஷன்கடைக்குசென்றுஸ்மார்ட் கார்டுவழங்கினால், அங்குகையடக்க, பி.ஓ.எஸ்., என்ற, 'பாயின்ட்சேல்டிவைஸ்' என்றஇயந்திரத்தில் செருகி,குடும்ப உறுப்பினரின் கைரேகைபதிவுசெய்தஉடன், பொருட்கள்வழங்கியதற்கானரசீது வழங்கப்படும். இந்த திட்டத்தில், சிலமாறுதல்களைசெய்து,தமிழகத்தில்செயல்படுத்த, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive