கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க கால அவகாசம் இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - சென்னை மாவட்டத்திலுள்ள
கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்; ஆகஸ்ட் 2016 –க்கான சேர்க்கைக்கு
கால அவகாசம் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் 8-ஆம் வகுப்பு மற்றும்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள்; அவரவர் வசிக்கும்
இடத்திலிருந்தபடியே www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில்
விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ500/- உதவித்தொகையுடன் விலையில்லா சீருடைகள் காலணிகள் மிதிவண்டி
லேப்டாப் வரைபட உபகரணங்கள் பாடபுத்தகங்கள் பேருந்து பயண அட்டை மற்றும்
சலுகை கட்டணத்தில் இரயில் பயண அட்டை ஆகிய சலுகைகளுடன் முற்றிலும்; இலவசமான
பயிற்சி பெற மாணவர்கள் 30.06.2016-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு
சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கல்வி பயில ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...