சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் யோகாவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 2-வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டத்தில் பொதுமக்களுடன் யோகா பயிற்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் கலந்துகொண்டனர்.
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
யோகா தினத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது.
யோகா வாழ்க்கையில் ஒழுக்கத்தை கற்றுத்தருவதுடன், மனம் மற்றும் மூளையை ஒருங்கிணைத்து செயல்படும். யோகா செய்பவர்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ்வர். முதலீடு இல்லாமல் கிடைக்கும் இப்பயனை அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டும்.
யோகாவை பயில ஏழை பணக்காரர், படித்தவர் - படிக்காதவர் என்ற பேதமில்லை. யோகவை பள்ளிகளில் பாடமாக கொண்டுவரப்படும். சிறந்த யோகா ஆசிரியர்களை உருவாக்கி உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்த வேண்டும். யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று பேசினார்.
யோகா நிகழ்ச்சியில் மூச்சு பயிற்சிகள், தியானம் இறுதியாக சாந்தி பாதை செய்யப்பட்டது. 3 நிமிடம் 15 வினாடிகள் ஓடும் 'யோக் தீத்' என்ற யோகா சர்வதேச தின ஒரு தீம் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலை தீரஜ் சரஸ்வத் எழுதி உருவாக்கி உள்ளார்.
கேபிடல் வளாகம் தவிர, சண்டிகரில் முழுவதும் 100 இடங்களில் யோக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் டி-சர்ட் மற்றும் கருப்பு அல்லது நீல டிராக்சூட்டின் அணிந்திருந்தனர்.
யோகா தினத்தை முன்னிட்டு சூரிய நமஸ்காரம் பற்றிய தபால் தலையை நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்,
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் அலுவலக ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உரையில் யோகக்கலையின் சிறப்புகளை எடுத்துரைத்த அவர், சர்வதேச யோகா தினமாக ஒரு தினத்தை ஐ.நா. பொதுச்சபை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஐ.நா. பொதுச்சபையில் உறுப்பினராக உள்ள 196 நாடுகளில் 47 முஸ்லிம் நாடுகள் உட்பட 177 நாடுகள் யோகா தினம் கொண்டாட ஆதரவு அளித்தன. இதனைத்தொடர்ந்து ஓவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என டிசம்பர் 11, 2014 -ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...