Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் இந்த முறையும் இல்லை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடரும் ஏமாற்றம்

        மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பு ஆண்டும் எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படாததால், 150 சீட்டுகளுக்கே மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
          மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கடந்த 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்க இங்கு 150 சீட்டுகள் உள்ளன.

ஆரம்பகாலத்தில், இக்கல்லூரியில் 183 எம்பிபிஎஸ் சீட்டுகள் வரை இருந்துள்ளன. அதன்பின் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை குறைந்து, கடந்த ஆண்டு 155 சீட்டாகஇருந்தது. இந்த ஆண்டு மேலும் 5 சீட்டுகள் குறைந்து 150 சீட்டுகளில் வந்து நிற்கிறது. நடப்பாண்டு இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த 26-ம் தேதி முதல் எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. நேற்று வரை 1,454 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். வரும் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்டு கள் எண்ணிக்கையை 150-ல் இருந்து 250ஆக அதிகரிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அதற்கான கட்டமைப்பு வசதிகள் மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லூரியிலும் இல்லை என இந்திய மருத்துவக் கவுன்சில் கூறி ஆய்வுக்கே வராமல் இருந்தது.

இந்நிலையில் சில மாதங் களுக்கு முன், 250 சீட்டுகள் நடப்பாண்டில் அதிகரிக்கப் படுவ தற்கான ஒப்புதல் வழங்கி,இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வுக்கு வருவதாகக் கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த பவள விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரி க்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.அமைச்சர் அளித்த வாக்கு றுதியால் எம்பிபிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை நடப்பாண்டு அதிக ரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் குழு எம்பி பிஎஸ் சீட்டுகள் எண்ணிக்கை அதிகரிப் பதற்கான ஆய்வுக்கே கடைசி வரை வரவில்லை. அதனால், நட்பபாண்டும் 150 எம்பிபிஎஸ் சீட்டுகளுக்கே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் வழக்கம்போல் ஏமா ற்றம் தொடர்கிறது.

இதுகுறித்து மருத்துவக் கல் லூரி பேராசிரியர்கள் கூறியது: தமிழகத்திலேயே அதிகளவு நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருந்தபோதிலும் இங்கு போது மான விரிவுரைக் கூடங்கள், ஆய்வுக் கூடங்கள் இல்லை. பேராசிரியர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை இல்லை.மருத்து வமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தற்போதுதான் தமிழக அரசு மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து அதிகப்படியான நிதிகளை ஒதுக்கிவருகிறது.

இப்பணிகள் முடிய இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல்ஆகும். அதனால், கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படும்பட்சத்திலேயே கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனர்.மருத்துவக் கல்லூரி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒவ் வொரு ஆண்டும் அடுத்த ஆண்டு முதல் கூடுதல் எம்பிபிஎஸ் சீட்டுகள் கிடைக்கும் என நம்பிக்கை அளிக்கப் படுகிறது.ஆனால், கடைசியில் ஏமாற்றமே கிடைக்கிறது. தற்போது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு கூடுதல் சீட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!