திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளி
கொண்டாப்பட்டு சின்ன காங்கேயனூர் கிராமத்தில் அரசு நிதியுதவி பெறும்
உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த கல்வி ஆண்டு
முடிவில் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, பணி மூப்பு அடிப்படையில் பள்ளியில்
அடுத்த இடத்தில் இருந்த உதவி தலைமை ஆசிரியர் ரவி என்பவரை தான் தலைமை
ஆசிரியராக நியமித்து இருக்க வேண்டும்.
ஆனால், உதவி தலைமை ஆசிரியர் ரவிக்கு அடுத்த
இடத்தில் உள்ள ஜெயந்தி என்ற ஆசிரியைக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு
வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பணி மூப்பு அடிப்படையில் தலைமை ஆசிரியர்
பொறுப்பு வழங்கப்படாதது, பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் இடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. சின்ன காங்கேயனூர் நிதியுதவி
பள்ளியும் திறக்கப்பட்டன. இந்த கல்வியாண்டின் தொடக்க நாள் என்பதால் மாணவ,
மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு இன்று காலை வந்தனர். அப்போது, தலைமை ஆசிரியர்
பொறுப்பு ரவிக்கு வழங்கப்படாததை அறிந்து மாணவ, மாணவிகளும்
அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து புதிய தலைமை ஆசிரியை ஜெயந்திக்கு
எதிர்ப்பு தெரிவித்தும், பணி மூப்பு அடிப்படையில் தலைமை ஆசிரியர் பொறுப்பை
ரவிக்கு வழங்கக் கோரியும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு பூட்டு போட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள்
பள்ளிக்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை துணை
போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் கீழ்பென்னாத்தூர் போலீசார்
விரைந்து வந்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். மாணவ, மாணவிகள்
மற்றும் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையேற்று போராட்டத்தை கைவிட்டு அனைவரும்
கலைந்து சென்றனர். முதல் நாளிலேயே பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவ, மாணவிகள்
போராட்டம் நடத்திய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...