புகையிலைப்
பொருள்களின் 98 சதவீத விற்பனை பள்ளிகளை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே
அதிகம் நடைபெறுகிறது என புகையிலைக்கு எதிரான இயக்கம் நடத்திய ஆய்வில் பகீர்
தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து புகையிலைக்கு எதிரான குழந்தைகள் இயக்க மாநில நிர்வாகி சிரில் அலேக்சாண்டர் கூறியதாவது:-
பள்ளிகளுக்கு அருகே கடந்த 6 மாதமாக 100 மீட்டர் தொலைவில் கண்காணிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள தனியார், அரசு, மாநகராட்சி பள்ளிகளுக்கு அருகே 98 சதவீதம் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இந்த விற்பனை மாணவர்களை மையப்படுத்தியே நடத்தப்படுவது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. இதன்மூலம், சென்னையில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
விற்பனை தந்திரங்கள்: புகையிலைப் பொருள்களை குழந்தைளின் பார்வையில் படும்படி வைத்தல், தின்பண்டங்களுக்கு அருகே வைத்திருத்தல் என 60 சதவீதம் கடைகள் விற்பனை தந்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்கின்றன. இதனால், பள்ளிகளுக்கு அருகிலேயே புகையிலைப் பொருள்களை வைத்து விற்பனை செய்து மாணவர்களின் கல்வி, ஆரோக்கியம், தவறாக வழிநடத்துதல் உள்ளிட்டவைக்கு ஆள்படுகின்றனர். இதேபோல், கல்லூரி, பெருநிறுவனங்களுக்கு அருகிலும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம், அன்றாடம் பள்ளிக்குச் செல்லும் குழுந்தைகள் புற்றுநோய் பாதிப்புக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
விற்பனை பின்னணி: புகையிலைப் பொருள்களின் விற்பனை பின்னணியில் பல்வேறு அரசியல், புகையிலை நிறுவனங்கள் தலையீடுகள் உள்ளது. அதோடு, பள்ளிகளில் பயிலும் மாணவரில் ஒருவர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையானால் ஒராண்டு முடிவதற்குள் 30 மாணவர்கள் இந்தப் பழக்கத்துக்கு ஆள்படுகின்றனர்.
ஆகவே, புகையிலைப் பொருள்களுக்கு எதிரான சட்டம் இருந்தும், அதனை மேலும் கடுமையாக்கவும், பள்ளிக்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து புகையிலை விற்பனை கடைகளை அகற்ற வேண்டும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...