வருமான வரியை குறைக்க என்ன வழி, எப்படி வரி செலுத்துவதிலிருந்து தப்பிகலாம் என பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள்...
இதோ உங்களுக்குத்தான் இந்த 80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...
1. பொது வருங்கால வைப்பு நிதிஇது ஒரு பெரிய நீண்ட கால வரி சேமிப்பு முதலீடு ஆகும். இந்த ஓய்வூதிய முதலீட்டு திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து வரி விலக்கு பெறலாம். மேலும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மீதான வட்டி வருமானம் மற்றும் முதிர்வு பெறப்பட்ட தொகை ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு உண்டு.
2. ஈக்விட்டி லிங்க்டு சேமிப்பு திட்டம்
இந்த முதலீடு திட்டத்தில் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் வரி விலக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தின் செயல்பாடு பொறுத்து ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வட்டி விகிதம் மற்றும் முதலீடு முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.
3. நிலையான வைப்புத் தொகை
நிலையான வைப்புத் தொகை பிரபலமான மற்றொரு வரி சேமிப்பு முதலீடாகும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களிடையே நிலையான வைப்புத் தொகையின் வட்டி விகிதம் வேறுபடும். குறைந்தபட்ச 5 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு வரி விலக்குஅதிகபட்ச வரி விலக்கு ரூ .1.5 லட்சம் ஆகும். வட்டி மற்றும் முதிர்வு தொகை வரிவிதிப்புக்கு உட்பட்டதே.
4. என்.எஸ்.சி. - தேசிய சேமிப்பு சான்றிதழ்
என்எஸ்சி என்பது இந்திய அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள வரி சேமிப்பு முதலீடு ஆகும். இது ஒரு 5 ஆண்டு திட்டம். இந்த முதலீட்டிற்கும் வரி விலக்கு உண்டு. எனினும் இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டி வரி விதிப்பிற்குட்பட்டதே.
5. ஊழியர் சேமநல நிதியம்
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். இந்த முதலீடு 12. சதவீதம் ஊழியர்களின் அடைப்படை சம்பளத்தில் இருந்தும், மேலும் 12 சதவீதம் வேலை அளித்த நிறுவனத்தாரும் செலுத்த வேண்டும். இந்த தொகை முதிர்வின் போது பெறப்படும் வட்டிக்கு வரி விலக்குஉண்டு.
6. ஆயுள் காப்பீடு
வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சி இன் கீழ் மிகவும் பிரபலமான வரி சேமிப்பு முதலீட்டு திட்டம் ஆயுள் காப்பீடு. ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது. முதலீட்டு தொகை முதிர்வின் போதோ அல்லது பாலிசிதாரர் இறப்புக்குப் பின் வழங்கப்படும் தொகைக்கோ வரி விதிக்கப்படுவதில்லை. இதுதவிர ஆயுள் காப்பீடு மூலமாக ஒருவரது வாழ்வில் சேமிப்பு நலன்கள் பலவும் கிடைக்க உதவுகிறது.
7. யூலிப் (யூனிட் காப்பீட்டு திட்டம்)
யூலிப் ஒரு தனிச் சிறப்பு மிக்க கூட்டு காப்பீட்டு திட்டமாகும். இதில் வருடத்திற்கு ரூ 1.5 லட்சம் வரி சேமிப்பு வழங்கப்படுகிறது. நாம் செலுத்திய பிரீமியம் காப்பீடு மற்றும் முதலீடு என பிரித்து வழங்கப்படுகிறது.முதிர்ச்சியில் பெறப்படும் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
8. என்.பி.எஸ். (தேசிய ஓய்வூதிய சிஸ்டம்)
தேசிய ஓய்வூதிய அமைப்பு ஒரு கூடுதல் வரி சேமிப்பு முதலீடு ஆகும். இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டம் ஓய்வு காலத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதா. இடையில் திரும்ப பெற கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை வருமான வரி கழிக்கப்படும். எனினும் வேலை வழங்கிய நிறுவனம் இந்த கணக்கில் பங்களிப்பு செய்தால் எந்த வரம்பும் இல்லாமல் வரி விலக்கு இருக்கும்.
9. சுகன்யா சம்ரிதி யோஜனா
பெறோர்கள் அல்லது பாதுகாப்பாளர்களால் பெண்குழந்தைகளுக்கு செலுத்தப்படும் செல்வமகள் சேமிப்புதிட்டமாகும். பெண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள் எந்த நேரத்திலும் இந்த கணக்கை தொடங்கலாம். மத்திய அரசு 10-வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒரு நிதியாண்டில் 1.50,000 ரூபாய் வரை இத்திட்டத்தில் சேமிக்கலாம். தொகை முதிர்வின் போது வழங்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...