இந்தி பேசும் மக்களிடையே வேத பாடங்கள் கற்கும் ஆர்வம்
அதிகரித்துள்ளது. இதை மனதில் கொண்ட விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) கூடுதலாக 5
வேத பாடசலைகளை துவக்க உள்ளது.
இவை, புதுடெல்லி, பஞ்சாபின் அமிருத்சர், ராஜஸ்தானின் பஸ்வாரா,
உபியின் மத்துரா மற்றும் ஹரியானாவின் குர்காவ்ன் ஆகிய இடங்களில்
அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கல்வியாண்டு, வரும் ஜூலை மாதம் முதல்
துவக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆசிரியர்கள் பணி அமர்த்தலை விஎச்பி
முடித்து விட்டது. இதில், சுமார் 120 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று
வருகிறது. இங்கு வேதம், வேதாந்தம், ஜோதிடம், வியாகரன், சந்தத், நிருக்த்,
காவியம் மற்றும் ஷிக்ஷா ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளன. ஆச்சார்யா,
வேதாச்சார்யா மற்றும் வேதபண்டிதர் உட்பட பல பட்டங்கள் அளிக்கப்பட உள்ளன.
விஎச்பி சார்பில் தற்போது நாடு முழுவதிலும் முக்கிய
நகரங்களில் ஆறு வேதபாடசாலைகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 1400
மாணவர்கள் வேதம் மற்றும் வேதாந்தம் பயின்று வருகின்றனர். இத்துடன் அரசு
மற்றும் மற்ற அமைப்புகள் நடத்துபவையும் சேர்த்து மொத்தம் 33 வேதபாடசாலைகள்
உள்ளன. இவை உபியில் அதிகமாக அலகாபாத், ஹரித்துவார், அயோத்தி, மத்துரா,
ரிஷிகேஷ் மற்றும் லக்னோவில் உள்ளன.
தற்போது வெளிநாட்டவர்களும் வேதங்கள் கற்பதில் அதிக ஆர்வம்
காட்டுவதால் அங்கும் புதிய வேதபாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில்
ஆசிரியர் பணிக்காக இந்தியாவில் வேத பாடசாலைகளில் படித்தவர்கள் வாய்ப்புகள்
அதிகம் உள்ளன. வழக்கமாக அனைத்து வேத பாடசாலைகளிலும் ஜூலை மாதத்தில் புதிய
மாணவர்கள் சேர்க்கப்படுவது வழக்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...