பீஹாரில் ரூ.5 லட்சம் கொடுத்தால்
கல்லூரியில் சேராமல், தேர்வு எழுதாமல் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு
சான்றிதழை பெற முடியும். தேர்வு துறையில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க
சென்ற சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய
வந்துள்ளது.
பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் ப்ளஸ் 2
தேர்வில் விடைத்தாளை மாற்றி, மாநிலத்தில் முதலிடம் பிடித்த இரண்டு
பேருக்கு அவர்கள் படித்த பாடத்தின் பெயரை கூட சரியாக உச்சரிக்க
தெரியவில்லை. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வு துறையில் நடந்த
ஊழல் வெளி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தொடர் விசாரணையை சிறப்பு
புலனாய்வு குழு மேற்கொண்டு வருகிறது.
இதில் பள்ளி அல்லது கல்லூரியில் சேராமல்,
தேர்வு எழுதாமல் ரூ.5 லட்சம் கொடுத்தால் எந்த படிப்பிற்கான சான்றிதழையும்
பெற முடியும் என்ற நிலை பல ஆண்டுகளாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது.
பணம் கை மாறிய சிறிது நேரத்திலேயே பணம் கொடுத்தவரின் பெயரில் போலி
சான்றிதழ் உடனடியாக தயாரித்து தரப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த ஊழலில்
பலர் ஈடுபட்டுள்ளதாக கூறும் புலனாய்வுத்துறையினர், அவர்கள் பற்றிய
விசாரணையும், கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக
கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...