தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5
நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி
அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றதும் உடனுக்குடன் 5 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரின் பணிப் பதிவேட்டில் அவர்களின் ஈட்டிய விடுப்பு, மருத்துவவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு வரவு பதிவு, பணி சார்பார்த்தல் பதிவு ஆகிய விவரங்கள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். இப்பணிகளைச் செய்ய ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...