தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களில், ௫௮ வயது நிறைவடைந்தவர்களை, பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
.தமிழக அரசு உயர்நிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.இவர்களில் பலர், 58 வயதை தாண்டியும், பணிபுரிந்து வருவதாக புகார் எழுந்தது. இதனால், இவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாட்களில், பகுதி நேர ஆசிரியர்கள், 58 வயது நிறைவடைந்து இருந்தால், பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். இதற்கான அதிகாரம், தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, அப்பணியிடத்துக்கு மறு நியமனம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த பகுதியிலுள்ள, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...