இந்தியாவில் லட்சத்தில் 4 பேருக்கு
பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்று அப்பல்லோ
மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பழனிச்சாமி
கூறினார்.
பெருங்குடல் தொடர்பான பாதிப்புகளுக்கான பிரத்யேக
சிகிச்சை மையம் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்
திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி கூறியது:
வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சியின்மை, உணவுப்
பழக்கவழக்கங்களில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பெருங்குடல் புற்றுநோயால்
பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒரு
லட்சம் பேரில் 4 பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. நவீன சிகிச்சை முறைகள்,
முன்னெச்சரிக்கை பரிசோதனைகள் மூலம் இந்த நோயிலிருந்து குணமடையவும்,
பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றார் அவர்.
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையத்தில்
பெருங்குடல், மலக்குடல் தொடர்பான நோய்கள், புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு
சிகிச்சை அளிக்கப்படும். பல்வேறு நவீன பரிசோதனைகள், ரோபோடிக் அறுவைச்
சிகிச்சைகள் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...