Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது
. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணி களுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்ப கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு மேற்கண்ட பணிகளில் 4,931 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்டோபர் 16-ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ள வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் குறிப் பிடப்பட்டுள்ளது.இதை மனதில்கொண்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தேர்வர்கள் குரூப்-4 தேர்வுக்கு இரவு பகலாக படித்து வருகிறார்கள். தனியார் பயிற்சி மையங்களிலும் குரூப்-4 தேர்வுக்கான வகுப்புகள் மும்முரமாக நடைபெற்று வரு கின்றன.
சிறை அலுவலர் பதவி:
குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது:டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அக் டோபர் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும். இதற்கான அறி விப்பு இன்னும் ஒரு மாதத்தில் (ஜூலை) வெளியிடப்படும். மேலும், சிறைத்துறை அலுவலர் (ஜெயிலர்), தொழிலாளர் அலுவலர், சுற்றுலா அதிகாரிஉள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive