விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் நாளை வியாழக்கிழமை (ஜூன் 16) திறக்கப்படுகின்றன.
பல கல்லூரிகள் பள்ளிப் படிப்பை முடித்து புதிதாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கும் வகையில், முதல்
நாளில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. தமிழகத்திலுள்ள 80 அரசு
கலை, அறிவியல் கல்லூரிகள், 140 அரசு உதவு பெறும் கல்லூரிகள் மற்றும்
தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 6 -ஆம் தேதி முதல் மாணவர்
சேர்க்கை நடைபெற்று வந்தது.
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மணவர்களின் விண்ணப்பம் அதிக அளவில் இருந்ததால்
கலை, அறிவியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள
பல்கலைக்கழகங்கள் அனுமதி அளித்தன

சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் வரும் சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் அளவுக்கும்,
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அளவுக்கும், சுயநிதி
கல்லூரிகளில் 10 சதவீத அளவுக்கும் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள
அனுமதி அளித்துள்ளது.
எனினும் 33 அரசுக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 80 அரசுக் கல்லூரிகளில்
2500-க்கும் அதிகமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல்
உள்ளன. 4 மண்டல இணை இயக்குநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதன் காரணமாக கல்விப் பணிகள் மட்டுமின்றி, நிர்வாக ரீதியிலான பணிகளும்
முடங்கும் நிலை உருவாகியிருக்கிறது என்று அரசுக் கல்லூரி ஆசிரியர் மன்ற
பொதுச் செயலாளர் சிவராமன் தெரிவித்துள்ளா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...