தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82.94 லட்சம் மனுதாரர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் உத்தேசமாக 45 லட்சம் மனுதாரர்கள், கடந்த 2011–ம் ஆண்டு முதல் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பயின்ற மாணவர்கள்.
அவர்கள் தங்கள் கல்வித் தகுதியினைத் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இம்மனுதாரர்கள் தங்களின் உயர்கல்வியினை தொடர்ந்து கொண்டிருப்பவர்களாக கருதப்படுவார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, அரசுத் துறையில் 77 ஆயிரத்து 271 நபர்களும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 931 நபர்கள் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 5.82 லட்சம் பதிவுதாரர்கள் 171.14 கோடி ரூபாய் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையாக பெற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் துறை ஆணையர் பி.அமுதா மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...