இந்த மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த
தனித் தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் சனிக்கிழமை (ஜூன் 18) வரை
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜூன் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த
தனித்தேர்வர்கள் (தத்கால் உட்பட) வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் சனிக்கிழமை
(ஜூன் 18) வரை, ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்க்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில்
தங்களின் பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தக் கால அவகாசம் நிறைவு பெற்ற பின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப்
பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது. எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத்
தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக்
குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாகச் செய்முறைத் தேர்வினை
மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும்.
அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி
பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.
மொழிப்பாடங்கள் திறன் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த
விவரங்களை, தனித் தேர்வர்கள் தாம் எழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக்
கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம். உரிய தேர்வுக் கூட அனுமதிச்
சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...