அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களைத் தீர்க்கும்,
'தினமலர்' நாளிதழ் நடத்தும், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, வரும், 29ம்
தேதி, சென்னை குரோம்பேட்டையில் நடக்க உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள்,
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில் சேர, கவுன்சிலிங்கில்
பங்கேற்க வேண்டும். இந்த கவுன்சிலிங் குறித்த மாணவர்களின்
சந்தேகங்களுக்குத் தீர்வு காண, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'உங்களால்
முடியும்' நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.இதுவரை சென்னை, மதுரை,
கோவை, புதுச்சேரி உட்பட பல நகரங்களில், 25க்கும் மேற்பட்ட இடங்களில், இந்த
நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டையில், வரும் 29ம் தேதி, 'உங்களால்
முடியும்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பஸ் நிலையம் பின்புறம், நியூ காலனி,
ஒர்க்ஸ் சாலையில் உள்ள, ஸ்ரீ பாலாஜி மகாலில், மாலை, 4:00 மணிக்கு நிகழ்ச்சி
துவங்கும். 'தினமலர்' நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
கல்லுாரி இணைந்து, இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. நிகழ்ச்சியில், கல்வி
ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பங்கேற்று, இன்ஜி., கல்லுாரிகள் மற்றும்
பாடப்பிரிவுகளின் தேர்வு பற்றி பேசுகிறார். அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்
குறித்த விதிமுறைகள் குறித்து, கல்வியாளர் ரமேஷ் பிரபா விளக்கம் அளிக்க
உள்ளார்.
சிறப்பு வசதிகள்:நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங்குக்கான வழிகாட்டி புத்தகம்
இலவசமாக வழங்கப்படும். கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு
கல்வியாளர்களிடம், மாணவர் மற்றும் பெற்றோர் விளக்கம் பெறலாம். சிறந்த
கேள்வி கேட்கும், இரண்டு பேருக்கு தலா,ஒரு 'பென் டிரைவ்', நான்கு பேருக்கு
தலா, ஒரு 'வாட்ச்' பரிசாக அளிக்கப்படும்.
மேலும், 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்ஜி.,
படிப்புக்கான உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். 1,000 பேருக்கு,
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில், 'ரோபாட்டிக்' பயிற்சி
இலவசமாக வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த கட்டணமும் இல்லை. பங்கேற்க விரும்புவோருக்கு,
பல்வேறு இடங்களிலிருந்து, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் வசதி
குறித்த தகவல்களை, 89399 17080 மற்றும் 89399 17084 ஆகிய எண்களில் தொடர்பு
கொண்டு பெறலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...