சமுதாய
வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் மாநில
இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 20 கடைசி நாளாக
அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விருது பெறுபவர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க
வேண்டும். சமுதாய தொண்டாற்றி குறிப்பிட தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க
வேண்டும்.
உள்ளூர் சமுதாய மக்களிடம் நல் மதிப்பை பெற்றிருக்க வேண்டும். தகுதி உடையோர் விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகங்கள், www.sdat.tn.gov.in என்ற
இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை ஜூன் 20 மாலை 4மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில்
சமர்ப்பிக்கலாம் என, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர்
செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...