தமிழ்நாட்டில் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ. மாணவர் சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டில் மாணவர்களைசேர்க்க அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்த உள்ளது.
கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வருகிற 20-ந்தேதி ரேண்டம் எண்ணும், 22-ந்தேதி தரவரிசை பட்டியலும் வெளியிடப்படுகிறது. 24-ந்தேதி விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. 25-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 27-ந்தேதி பொதுகலந்தாய்வும் நடைபெற இருக்கிறது. கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன், பேராசிரியர்கள் இந்துமதி, நாகராஜன், மல்லிகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...