'எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 25 ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள்
ஏற்கப்பட்டுள்ளன. தர வரிசை பட்டியல், ஜூன், 17ல் வெளியிடப்படும்' என,
மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம்'
எண், நேற்று வெளியிடப்பட்டது. இவற்றை வெளியிட்டு, மருத்துவக் கல்வி மாணவர்
சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறியதாவது:
எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 26 ஆயிரத்து, 17 விண்ணப்பங்கள் வந்தன; 25
ஆயிரத்து, 814 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான, 'ரேண்டம்' எண்
வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை, www.tnhealth.org மற்றும்
www.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து தெரிந்து
கொள்ளலாம்.மாநில ஒதுக்கீட்டிற்கு, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில்
இருந்து, 2,253 இடங்கள்; ஆறு சுயநிதி கல்லுாரிகளில் இருந்து, 470; இரண்டு
இ.எஸ்.ஐ., கல்லுாரிகளில் இருந்தும், 130 இடங்கள் என, 2,853 இடங்கள் உள்ளன.
விண்ணப்பித்தோருக்கான தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்படும்.
முதற்கட்ட கலந்தாய்வு, 20ம் தேதி துவங்கும்.
பலர்
ஒரே, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றிருந்தால் தாவரவியல், விலங்கியல்,
வேதியியல் பாட மதிப்பெண்கள்; பின், நான்காவது விருப்ப பாட மதிப்பெண்;
பிறந்த தேதி பார்க்கப்படும். அதிலும், ஒரே நிலை இருந்தால் பயன்படுத்த, சம
வாய்ப்பு எண் எனப்படும், 'ரேண்டம்' எண் தரப்
படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...