பிளஸ் 2 மாணவர்கள் வருகிற 20-ஆம் தேதி முதல் அசல் சான்றிதழைத் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குநர்
தண்.வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் மாதம் நடைபெற்ற
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே
19-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து
கொள்ளவும், 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது.
தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து
மாணவர்களுக்கும் வருகிற 20-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் அந்தந்த
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு
விநியோகம் செய்யப்படும்.
தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்
சான்றிதழ்களை, தாங்களே தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்
கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...