பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவு வெளியாகி, 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பிளஸ் 1 புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
. கடைகளிலும் விற்பனைக்கு வராததால், பிளஸ் 1 வகுப்புகள் முடங்கியுள்ளன.தமிழகத்தில், 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள், மே, 25ல் வெளியாகின. மாணவர்களுக்கு தேர்ச்சி பட்டியலுடன், தற்காலிக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டு உள்ளது.அதனடிப்படையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் துவங்குவதற்கான உத்தரவை எதிர்பார்த்துள்ளனர். அரசு பள்ளிகளில் சிலவற்றுக்கு மட்டும், பிளஸ் 1 இலவச புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் புத்தகம் வந்து சேராததால் யாருக்கும் வழங்காமல் உள்ளனர்.புத்தக தட்டுப்பாட்டால், பிளஸ் 1 வகுப்புகளை துவங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை இன்னும் சுற்றறிக்கை அனுப்பாமல் உள்ளதாக கூறப்படுகிறது.தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து, இ - சேவை மையங்கள் மூலம் புத்தகங்கள் வாங்க, 'ஆர்டர்' செய்துள்ளனர். ஆனால், பாடநுால் கழகத்தில் இருந்து இன்னும் புத்தகங்களை அனுப்பவில்லை. அதனால், தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 1 வகுப்புகளை துவங்க முடியவில்லை. இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:பிளஸ் 1 பாடங்களை கண்டிப்பாக நடத்த வேண்டும் என உத்தரவிடும் அதிகாரிகள், அதற்கான புத்தகங்களை விரைவாக வினியோகம் செய்வதில்லை. இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. சென்னையில், பள்ளிக் கல்வித் துறை வளாக சில்லரை விற்பனை மையத்திலும் புத்தக இருப்பு இல்லை, என தெரிவித்தனர்2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» புத்தகங்கள் கிடைப்பதில் தாமதம்: பிளஸ் 1 வகுப்புகள் முடக்கம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...