தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி கிடைக்க வாய்ப்பில்லாததால்
பிளஸ்-1 கணினி அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்கள் முன்வராத
நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகை அரசு
உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் கணினி அறிவியலை ஒரு
பாடமாகக் கொண்ட பல பிரிவுகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு வரை இந்த பிரிவில் மாணவர்கள் போட்டி போட்டு சேர்ந்து வந்தனர். ஆனால், நிகழாண்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமே இந்த பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கை இருந்து வருகிறது.அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் (Government Aided Schools) இந்த பிரிவுக்கு மாணவர்கள் சேர்க்கை மிக குறைவான அளவே இருப்பதாக பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு சுயநிதிப் பிரிவாகவே தொடங்கப்பட்டு , செயல்பட்டு வருகிறது. அரசின் கொள்கை முடிவு காரணமாக சுயநிதி கணினி அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவதில்லை. ஆனால், அதே பள்ளியில் மற்ற பிரிவை எடுத்து படிக்கும் அனைத்து மாணவர், மாணவிகளுக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினி கிடைக்கும் நிலையுள்ளது.
இதன் காரணமாக கணினி அறிவியல் பாடப்பிரிவை எடுக்க மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி உள்ளிட்டவை சுயநிதி கணினி அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.எனவே, தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க முன்வர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...