தேர்ச்சியில் முத்திரை பதித்தாலும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம்,
பொறியியல் படிப்புகளில் இடம் கிடைப்பது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது.
பிளஸ் டூ மதிப்பெண்ணால் அதிக கட் ஆப் பெற்று மருத்துவ இடம்
பெற்றிருக்கிறார் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பதுகடினம் என்ற கருத்தை
அர்த்தமற்றதாக்கி இருக்கிறார் இந்த மனோஜ் குமார். ராமநாதபுரத்தில் உள்ள
ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இந்த மாணவன் 199.75 கட் ஆஃப்
பெற்று மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 18ஆவது இடம் பெற்றார். தமிழக
மருத்துவக் கல்லூரிகளிலேயே சிறந்ததாகக் கருதப்படும் சென்னை மருத்துவக்
கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்ததை அடக்கத்துடன் ஏற்கிறார் இவர்.
மதிப்பெண் இருந்ததால் இடம் கிடைத்துவிட்டது. ஆனால், ஹோட்டல் தொழிலாளியான
தந்தையாலும், கூலித் தொழிலாளியான தாயாலும் குறைந்தபட்ச கட்டணமான 13,500
ரூபாய் மற்றும் விடுதி செலவு ஆகியவற்றை செலுத்துவது இயலாத காரியம். அதனால்
படிக்க வைக்க யாராவது கிடைப்பார்களா என்ற எதிர்பார்ப்புடன்
காத்திருக்கிறார் மனோஜ். மனோஜை போன்று அதே பள்ளியில்பயின்ற மொத்தம் 10
மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றிருப்பதாகக் கூறுகிறார்
அவரது ஆசிரியர் ஆறுமுகம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...