இன்ஜி., கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு, ஒரு லட்சம் இடங்கள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு, 14 கல்லுாரிகள் பி.இ., - பி.டெக்.,மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லூரிகளில், தமிழக அரசு சார்பில், இன்ஜி.,
கவுன்சிலிங்கை அண்ணா பல்கலை நடத்துகிறது.
கடந்த ஆண்டு, 1,56,010 பேர் விண்ணப்பித்தனர். 1,53,240 விண்ணப்பங்கள்
ஏற்கப்பட்டன. 2,00,374 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருந்தன.1,06,219 இடங்கள்
மட்டுமே நிரம்பின.
94,155 இடங்கள் காலியாகின. இந்த ஆண்டு, 8,000 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
குறைந்துள்ளன. 1,92,009 இடங்களே ஒதுக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு
கவுன்சிலிங்கில், ஆன்லைனில் விண்ணப்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மொத்தம்,
1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். 1,34,994 பேர்
விண்ணப்பங்களை அனுப்பினர்.
3,812 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 1,31,182 பேரின் விண்ணப்பங்கள்
ஏற்கப்பட்டன. கடந்த ஆண்டு, 536 கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு, 14
கல்லூரிகள் பி.இ., - பி.டெக்., அட்மிஷனை நிறுத்த முன் வந்துள்ளன. புதிதாக
இரண்டு கல்லூரிகள், அட்மிஷனுக்கு அனுமதி பெற்றுஉள்ளன. அதனால், கல்லூரிகளின்
எண்ணிக்கை, 524 ஆக குறைந்துள்ளது.
எனவே, இன்ஜி., கவுன்சிலிங்கில், இந்த ஆண்டு, ஒரு லட்சம் இடங்கள் காலியாகும்
என தெரிகிறது. அதாவது, விண்ணப்பங்களை விட அதிகமாக, 60,827 இடங்கள் அரசு
ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளதால், அவை காலியாகவே அறிவிக்கப்படும். அதன் பின்,
கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தவர்களில் பலர் மருத்துவம், ஐ.ஐ.டி., -
என்.ஐ.டி., மற்றும் கலை கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு பிடித்த கல்லுாரிகளில், தனியார்
நிர்வாக இட ஒதுக்கீட்டில் சேர்ந்து விட்டனர். இந்த வகையில்,
விண்ணப்பித்தவர்களில், 40 ஆயிரம் பேர் கவுன்சிலிங்குக்கு வராமல், ஆப்சென்ட்
ஆக வாய்ப்புள்ளது. எனவே, ஒரு லட்சம் இடங்கள் காலியாகும் என்பதால்,
தரத்தில் பின் தங்கியுள்ள பல இன்ஜி., கல்லூரி நிர்வாகங்கள் அச்சத்தில்
உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...