போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், கடந்த
ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், ஐந்து வயதுக்குட்பட்ட, 12 லட்சம்
குழந்தைகள், நோய்களுக்கு பலியானதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து, யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* சிகிக்சை அளிக்கக் கூடிய மற்றும் தடுக்கக் கூடிய நோய்களால், உலகெங்கும்,
கடந்த ஆண்டு, ஐந்து வயதுக்குட்பட்ட, 59 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தன
* இதில், 50 சதவீதம், இந்தியா, காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளில் நிகழ்ந்துள்ளது
* இந்தியாவில், கடந்த ஆண்டு இறந்த, 12 லட்சம் பேரில், 39 சதவீத குழந்தைகள்,
பிரசவம் மற்றும் பிறந்த உடன் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளால் இறந்தன.
நிமோனியாவுக்கு, 19 சதவீதம்; வயிற்றுப் போக்குக்கு, 9.8 சதவீதம், சீழ்ப்
பிடிப்பதால், 7.9 சதவீத குழந்தைகள் இறந்துள்ளன
* ஆயிரம் பிறப்புகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு, 1990ல்,
126 ஆக இருந்தது. தற்போது, அது, 48 ஆக குறைந்துள்ளது. சர்வதேச
அளவுடன்ஒப்பிடுகையில் மிக அதிகம். சீனா வில் இந்த அளவு, 11 ஆக உள்ளது
* இதுபோன்ற தடுக்கக் கூடிய மற்றும் சிகிச்சை அளிக்கக் கூடிய நோய்களால்
குழந்தைகள் இறப்பதற்கு முக்கிய காரணம், போதிய சுகாதார வசதிகள் இல்லாததே
* இந்தியாவில், 94 சதவீதம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கிறது. அதே நேரத்தில், 40 சதவீதம் பேருக்கே கழிப்பறை வசதி உள்ளது
* பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், 2030ல்,
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை, 6.9 கோடியாக
உயர்ந்துவிடும்.
யுனிசெப் ஆய்வறிக்கை :
மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான இந்தியா, நைஜீரியா போன்றவை,
குழந்தை இறப்பு விகிதத்தை தடுப்பதில் மிகவும் மெதுவாக செயல்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...