ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
.இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:
அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது; தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும்இல்லை. இதனால், திட்டமிட்டப்படி, ஜூலை, 11 முதல், 13.80 லட்சம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். நாளை, வேலைநிறுத்த, 'நோட்டீஸ்' வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஓடுவதில் சிக்கல்:
இதுகுறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில் அங்கீகரிக்கப்படாத, 110 சங்கங்களும் பங்கேற்கின்றன. ரயில் ஓட்டுனர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், 12 ஆயிரம்பயணிகள் ரயில்கள்; 7,000 சரக்கு ரயில்கள் சேவையில் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...