பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி
பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும்
வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் உடனடி துணைத் தேர்வு துவங்கி, ஜூலை,
6ல் முடிகிறது. தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு,
விருப்ப மொழி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்வுக்கு, ஜூன், 18 முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம்
செய்ய, அரசு தேர்வுத் துறை வாய்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு தகவல் தொகுப்பு
மைய இணையதளமான www.tngdc.gov.in என்ற தளத்தில், விண்ணப்பதாரர்கள், தங்களின்
மார்ச் மாத தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு
செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2016 மறுகூட்டல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் துணைத்தேர்வுகள் நடத்துவது சரியா?.
ReplyDeleteyes tel me பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2016 மறுகூட்டல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் துணைத்தேர்வுகள் நடத்துவது சரியா?
ReplyDelete