நிகழாண்டில் மருத்துவப் படிப்பில் தமிழகத்துக்கு கூடுதலாக 100 இடங்கள்
கிடைத்துள்ளன என்றார் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர்
விமலா.புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரியின்
கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழாண்டில் தமிழகத்துக்கு மருத்துவப் படிப்பில் 100 இடங்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்தபடி புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்குரூ. 249 கோடி நிதி ஒதுக்கினார். அந்தக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டடம் முறையாகக் கட்டப்பட்டு வருவது குறித்தும், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறையின்படி ஆய்வகம் கட்டப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழக முதல்வர் உத்தரவுபடி அடுத்த கல்வியாண்டில் (2017-18) கல்லூரி தொடங்கப்பட்டு 150 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். எனவே, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...